ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியீடு

இன்று, திடீர் திருப்பமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

TN Govt Orders to close sterlite

தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக தற்போது வந்துள்ள தமிழக அரசின் அரசாணை, தமிழக மக்களுக்கு பெரும் ஆறுதலாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நூறாவது நாளாக போராடிய தூத்துக்குடி மக்களை காவல்துறையின் துப்பாக்கிச்சூடு பலபேரை காவு வாங்கியது. வாழவேண்டிய பருவத்தில் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையான இளம்வயது பெண்கள் உட்பட பலர் இந்த துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Sterlite Copper Ltd.

தூத்துக்குடி பகுதி மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் மக்களிடையே இந்த போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு பலத்த கொதிப்பை ஏற்படுத்தியது. பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது, மக்களிடையே நிம்மதியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.


The Tamil Nadu government today shut down the Sterlite copper smelting plant in Tuticorin for good, meeting the long standing demand of the local residents. The decision, said Chief Minister E Palaniswami, has been made “in respect to public sentiments”. Sterlite has been repeatedly accused of violating pollution norms – a factor that has led to high incidence of cancer and other diseases in the area, activists said.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top