திண்டிவனம் தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த தமிழக அரசு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் போலி ரெம்டெசிவர் மருந்து செலுத்தி மருத்துவரின் இறப்புக்கு காரணமாக இருந்த தனியார் மருத்துவமனைக்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

திண்டிவனத்தை சேர்ந்த மருத்துவர் ராமன் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஐமிட் என்ற தனியார் மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து வாங்கி செலுத்திக் கொண்டு உள்ளார். ஆனால் மருத்துவம் பலன் இல்லாமல் மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து நடத்திய விசாரணையில் அவருக்கு போலியான மருந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலியான மருந்தை விற்பனை செய்ததற்காக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இதற்கிடையே சர்ச்சைக்கு உள்ளான மருத்துவமனையில் கொரோனா மருத்துவம் பெற்று செந்தில்குமார் என்பவர் இருந்தார் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் இருந்தவருக்கு போலி ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்பட்ட என விசாரணை நடத்த வலியுறுத்தினர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course