+2 பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி: தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் ப்ளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758, மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

+2 Exam Results Tamilnadu

தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று, அனைத்து பணிகளும் முடிவடைந்து, இன்று (புதன் கிழமை) பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார்.

பிளஸ் டூ பொதுத்தேர்வில் மொத்தம் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும், மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Exam Results for HSC

மேலும், மாவட்டங்களின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் 97 சதவீத தேர்ச்சி பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. ஈரோடு மாவட்டம் 96.3 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 96.1 சதவீதம் பெற்று மூன்றாவது இடத்தையும் அடைந்துள்ளது.

ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தை பார்க்கையில், சென்ற ஆண்டை விட 1% தேர்ச்சி குறைந்துள்ளது. சென்ற ஆண்டு 92 .1% என்றிருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 92% ஆக உள்ளது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன் அவர்கள் வெளியிட்ட மணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய விவரங்களை கீழ் காணலாம்

* தமிழகம், புதுவையில் பிளஸ் டு பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
* மணவிகள் 94.1 சதவீதம், மாணவர்கள் 87.7 சதவீதம்
* வழக்கம் போல் மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்றுள்ளனர்
* கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

* 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
* 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம்,
* 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம்

Senkottaiyan Education Minister TN

இந்நிலையில் பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவ, மாணவியர்கள் ஜூன் 25-ம் தேதி மீண்டும் தேர்வெழுதலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக்கூடாது என்றும், அதையும் மீறி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

[advertisement block=”1″]


While Tamilnadu 12th exam results are announced online which can be checked on the website tnresults.nic.in, Tamilnadu education minister Mr. K.A. Sengottaiyan has met the press today to announce the statistics of the exam results. Also, he has warned the private schools against advertising the photos of passed students for their school promotional activities.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course