ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலினை தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதற்காக  நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். திமுகவின் வெற்றி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார்.திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.


வெற்றி பெற்றதைத் தொடர்ந்து  மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 இந்நிலையில் நடிகர் ரஜினியும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும்  மு.க. ஸ்டாலின் என்னுடைய அன்பு நண்பர்  நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து,வளமான மாநிலமாக தமிழகத்தை  மாற்ற பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என  ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top