தூத்துக்குடி கொடூரம்: 10 க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் மரணம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த பல மாதங்களாக அம்மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர். இதனிடையே, அங்கே போராடி வந்த மக்கள், ஏற்கனவே அறிவித்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். ஆட்சியர் மாளிகையை முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பிறகு நடந்த எல்லாமே மிகக்கொடுமையான கட்சிகளாகவே நடந்து, கடைசியில் ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி சூட்டிற்கு இறையாகினர்.

Thuthukudi Sterlite Protest Photos

போராட்டத்தில் வன்முறை வெடித்ததாகவும், அதை கட்டுப்படுத்தவே வேறு வழி இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டியாயிற்று என்றும் அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், இது வரம்புமீறிய மனிதாபிமானமற்ற கொடூரமென்றே மக்களால் பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் கிடைப்பெற்ற பெயர்கள்:

  1) ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்)
  2) கிளாஸ்டன் – (லூர்தம்மாள்புரம்- தூத்துக்குடி)
  3) கந்தையா – (சிலோன் காலனி – தூத்துக்குடி)
  4) வெனிஸ்டா (17 வயது மாணவி) தூத்துக்குடி
  5) தமிழரசன் – (புரட்சிகர இளைஞர் முன்னணி, குறுக்குசாலை – தூத்துக்குடி)
  6) சண்முகம் – (மாசிலாமணிபுரம் தூத்துக்குடி)
  7) அந்தோணி செல்வராஜ் – (தூத்துக்குடி)
  8) மணிராஜ் (தூத்துக்குடி)
  9) வினிதா (29)

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு, கலவரத்தை அடக்க நடந்த துப்பாக்கிசூடு போலில்லாமல், பலரும் குறிவைத்தே தாக்கப்பட்டுள்ளனர் என்று பலராலும் விமர்சிக்கப்படுகிறது. காரணம், இதில் கொல்லப்பட்டுள்ள பெரும்பாலோனோர் இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்குவகித்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி, வாயில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Young Girl Killed in Tuticorin

வாயில் சுடப்பட்டு கொலையான 17-வயது மாணவி

கலவரம் நடந்ததாக சொல்லப்படும் ஒரே இடத்தில இந்த துப்பாக்கிச்சூடு நடக்காமல், பல்வேறு இடங்களில் தனித்தனியே துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் நடந்தேறியுள்ளதால் இது பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பலபேர், பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரணமடைதவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் தூப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் மேலும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும், தூப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com