தமிழக மீனவர்களின் படகுகளை அழித்தொழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இதுநாள் வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான 94 விசைப்படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இந்நிலையில், இலங்கை கடற்கரையில் மாசு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்த படகுகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதால் அங்கு மாசு ஏற்பட்டுள்ளதாக  புகார் எழுந்துள்ளது.

TN Fisherman Boats

அதுமட்டுமல்லாமல், கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் கூறி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் அதிர்ச்சி!

இது தொடர்பான வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 94 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் 88 படகுகள் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு சொந்தமானது. இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தமிழக மீனவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, தங்கள் படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

scroll to top