கார் சர்வீஸ் நிறுவனத்தில் வாக்காளர்  அட்டையுடன் வந்தால் 16% தள்ளுபடி..

திருச்சியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்தால் 16 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கும் கார் சர்வீஸ் நிறுவனத்தின் சலுகை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 

 மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருச்சியில் உள்ள கார் சர்வீஸ் நிறுவனமொன்று தேர்தலையொட்டி வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ஆஃபரை வழங்கியிருக்கிறது.

16-வது சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் உள்ள நிலையில், அதனை குறிப்பிடும் வகையில் 16 சதவீத தள்ளுபடியை அறிவித்தது. தள்ளுபடி என்பது வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது .

இன்று முதல் வருகின்ற தேர்தல் வரை வழங்கப்பட உள்ள இந்தச் சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கான கார் சர்வீஸில் 16 சதவீதம் வரை சலுகையை பெற முடியும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course