விருப்ப ஓய்வு பெறுகிறார் திரு. சகாயம் IAS அவர்கள்

தமிழகத்தில் தற்போது பாமர மக்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால், அது திரு. சகாயம் அவர்கள் தான். தற்போது, தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

சகாயம் அவர்களால் “மக்கள் பாதை” என்ற ஒரு அமைப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மக்களின் பல்வேறு பிரச்சனைகளை கேட்டும் அதற்கான வழிமுறைகளையும் தந்து வருகிறது. திரு. சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர். தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 6 வருடமாக பதவி வகித்து வருகிறார்.

Sagayam is Retiring from Govt. Job

Mr. U. Sagayam, IAS (Indian Administrative Service)

தற்பொழுது 57 வயதாகும் சகாயம் அவர்கள், அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற மேலும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் வி.ஆர்.எஸ் (Voluntary Retirement Scheme) கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.
வி.ஆர்.எஸ்.க்கு விண்ணப்பித்த திரு. சகாயம் அவர்களை அரசு பணியிலிருந்து விடுவிக்க இன்னும் 2 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவர் அரசு பதவிவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

முக்கியமில்லாத பதவியில் பல ஆண்டுகளாக வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் சகாயம் இந்த முடிவை எடுத்துள்ளார். மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயம் விருப்ப ஓய்வை கேட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலும் நெருங்கிவரும் நிலையில், தற்போது திரு. சகாயம் அவர்கள் பணியிலிருந்து விடுப்பு கேட்டிருப்பது, ஏதேனும் அரசியல் கட்சிக்கு அவர் ஆதரவு தருவாரா என்ற கேள்வியும் எழ தொடங்கியுள்ளது.

scroll to top