சிக்ஸர்களை பறக்கவிட்ட மோரிஸ் – 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

 

கிறிஸ் மோரிஸ் அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட்டு 18 பந்தில் 36 ரன்கள் எடுக்க மில்லர் அரை சதமடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லாக டெல்லியை வீழ்த்தியது. 

 

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் 7-வது லீக்கில் மோதியது. இதையடுத்து டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரீத்திவ் ஷா, ஷிகார் தவன் களமிறங்கினார்கள். இதற்கு முந்தைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய இருவரும் இன்றையப் போட்டியில் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். டெல்லி அணியில் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் கேப்டன் ரிஷப் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடி 51 ரன்கள் சேர்த்தார்.

 

டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவற்றநிலையில் 147 ரன்களே எடுத்தன. இதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி சார்பில் உனட்கட் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன்கள் அடித்தால்  வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.


தடுமாறிய ராஜஸ்தான் அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தனர்.டேவிட் மில்லர் மட்டும் சிறப்பாக விளையாடி 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் கொடுத்தார். கடைசி ஓவர்களில் கிறிஸ் மோரிஸ் அதிரடி காட்ட போட்டியில் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டது.

 

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 12 ரன்களே உள்ள நிலையில் டெல்லி அணி சார்பில் கடைசி ஓவரை டாம் குர்ரன் வீச மோரிஸ் எதிர்கொள்ள முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் சிக்ஸர் விளாசி அசத்தினார்.

 

இதனால் கடைசி ஓவரில் கடைசி 4 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல்
4-வது பந்தில் அதிரடியாக  சிக்ஸர் அடித்து அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course