தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை..

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தென் தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1 கி.மீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், 20 முதல் 22-ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

 

 

23,24 தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.அடுத்த 4 நாட்களுக்கு மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women