மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா மருத்துவ பிரிவில்  ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அங்கு உள்ள நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் 1400 நோயாளிகள் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆக்சிஜனுடன் கூடிய 400 படுக்கைகளும் நிரம்பிய நிலையில் 120 பேர் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென மருத்துவமனையில் செயல்பட்டுவந்த ஆக்சிஜன் நிரப்பிகள் முழுவதுமாக தீர்ந்து போன நிலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்குப் போராட கூடிய நிலை ஏற்பட்டது. இதனிடையே போதிய ஆக்சிஜன் இல்லாததால் சிலர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

 ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக தற்காலிகமாக சிறிய அளவிலான சிலிண்டர்கள் மூலமாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சியிலிருந்து ஆக்சிஜன் டேங்கர் மூலம் கொண்டுவரப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course