மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணத்தை உயர்த்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.15 ஆக இருந்த நடைமேடை கட்டணம் இன்று முதல் ரூ.50 ஆக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு மற்றும் கோவை ரயில் நிலையங்களிலும் இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.