சேலம் இரும்பாலையில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை இன்று திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களுடன் ஆய்வு செய்தார்.

 
 
 
இதனையடுத்து கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குழாய் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களைச் சந்தித்த முதலமைச்சர், அனைவரும் இருமுறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா எனக் கேட்டறிந்தார்.
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women