கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டு முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதியை தனது சொந்த தொகுதியாக கருதி போட்டியிட்டு வந்தார். அதில், 1996 தேர்தலிலும் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், கடந்த 2011ல் சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டது. அப்போது புதியதாக கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது.

இந்த தொகுதி உருவான முதல் தேர்தலிலேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். இதில், மு.க.ஸ்டாலின் 68,784 வாக்குகள் பெற்றார். அதிமுகவில் உள்ள வேட்பாளர் சைதை துரைசாமி 65,965 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் அவரை எதிர்த்து போட்டியிட்ட மு.க.ஸ்டாலின்  அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியைவிட 2,749 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். அவர், தொகுதி முழுவதும் ‘பேசலாம் வாங்க’ என்ற தலைப்பில் அந்த தொகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.

ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து தொகுதி மக்களை சந்தித்து பேசிய அவர் அவர்களது  குறைகளை கேட்டறிந்தார். அதே போன்று தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வந்தார். சட்டசபையில் தொகுதி பிரச்சனைக்காக குரல் எழுப்பினார் . இதன் காரணமாக தொகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டன.

இதனால், கடந்த 2016 – ம் ஆண்டு  இரண்டாவது முறையாக போட்டியிட்ட மு.க.ஸ்டாலின்  கொளத்தூர் தொகுதியில் 91,303 வாக்குகள் பெற்று எளிதாக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜே.சி.டி.பிரபாகர் 53,573 வாக்குகள் பெற்றார். அந்த முறை மு.க.ஸ்டாலின் 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த பிரமாண்ட வெற்றிக்கு பிறகு வாரம் தோறும் மக்கள் குறைகளை கேட்பதை வழக்கமாக  வைத்தார். இதனையடுத்து தொகுதி பிரச்னைகளை அவரது மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து சரி செய்யுமாறு வலியுறுத்தினார்.கொரோனா காலக்கட்டத்தில் தொடர்ந்து தொகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை அறிந்த அவர், தொற்று பாதிப்பை கூட பார்க்காமல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மக்களுக்கு தேவையான உதவிகளை தனது சொந்த பணத்தில் செய்து வந்தார். இதனால், தொகுதி மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகரித்தது.  இதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் 2021ம் ஆண்டும்  தமிழக சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகவும், திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் மூன்றாவது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில்  அமைப்புச் செயலாளரும் தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளருமான ஆதிராஜாராம், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜமால் முகமது மீரா, அமமுக சார்பில் ஜே.ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமிலஸ் செல்வா உள்பட 36 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொளத்தூர் தொகுதியில்தான் அதிகபட்சமாக  தமிழகத்திலேயே  36 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை சுலபமாக தலைவர் மு.க.ஸ்டாலின் வீழ்த்தி மூன்றாவது முறையாக  ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com