பல ஆண்டுகளுக்கு பிறகு 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் குரல்  சட்டமன்றத்தில்

சென்னையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்குள்  பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குரல் ஓங்கி ஒலிக்க இருக்கிறது. இதுவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், என்று மட்டுமே இருந்து வந்த கட்சிகளின் பிரதிநிதித்துவம் இப்போது பரந்து விரிந்து காட்சியளிக்கப்போகிறது. மே 7ல்  திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க திட்டமிட்டுள்ளார்.  நாளை ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை பேச்சுவார்த்தையின்படி தற்போது நடைபெற்று முடிந்த தேர்தல் மூலம் 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சட்டமன்ற பேரவையை  அலங்கரிக்க உள்ளனர்.


பலருக்கும் தமிழக சட்டமன்றம் என்றாலே திமுக, அதிமுக என்று தான்  இன்றும்  நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்த இரண்டு காட்சிகளை  கடந்து மாற்று கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஆரோக்கியமான விவாதங்களை, ஆலோசனைகளை நல்கிய காலமும் இருந்திருக்கிறது. குறிப்பாக 2001 முதல் 2011 காலகட்டங்களில் நடந்த அத்தகைய ஆட்சி நிகழ்வுகள் மீண்டும் திரும்ப இருக்கின்றன. பலதரப்பட்ட  கட்சிகளின் சிந்தனைகளை, கொள்கைகளை உடைய உறுப்பினர்களின் உரிமைக் குரல்கள் இனி ஓங்கி ஒலிக்க இருக்கின்றன.

அதன்படி தேசியக் கட்சிகளான திமுக, அதிமுகவை தவிர்த்து காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேரவைக்கு வரவிருக்கின்றன. இதையடுத்து பிராந்தியக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக, கொ.ம.தே.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாமக, புரட்சி பாரதம் என வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகளின் உறுப்பினர்கள்  இம்முறை சட்டப்பேரவைக்கு செல்கின்றனர். 

இதனால் திமுக அரசு இதுவரை இல்லாத வகையில்  மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு புதுமையை எதிர்கொள்ள உள்ளது. இதனிடையே எதிர்கட்சி உறுப்பினர்கள் முன் வைக்கும் கேள்விகள், சந்தேகங்கள், புகார்கள், கோரிக்கைகள் என எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்து செல்ல வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.இந்த முறை பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும்  இடம்பெற்றுள்ளதால் புதிதாக அமையவுள்ள 16-வது சட்டமன்றத்தை ஜனநாயக சட்டமன்றமாகவே கருதத் தோன்றுகிறது.

இதையடுத்து சட்டப்பேரவையில் கருணாநிதி, காமராஜர், காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையை ஸ்டாலினும்  அளிப்பார் எனக் கூறிய மூத்த பத்திரிகையாளர் கணபதி. மேலும்,கோல்டன் பீரியட்ஸ் என்று சொல்வார்களே ஆங்கிலத்தில் அதைபோல் ஸ்டாலின் தனது ஆட்சிக்காலத்தை பொற்காலமாக மாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top