வாக்கு சேகரிக்க வந்த அதிமுக   வேட்பாளர்களுக்கு தரமற்ற அரிசியால் ஆரத்தி எடுத்த பெண்கள்…!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர், இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ வாகவும் பதவி வகித்து வரும் திரு.மாணிக்கம், அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் தன்னுடைய வாக்கு சேகரிப்பை துவக்கினார். முதற்கட்டமாக அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். 

 

அப்போது அதிமுகவினர் யாரும் எதிர்பாராத வகையில், அப்பகுதியில் வழங்கப்படும் நியாய விலை கடை அரிசிகள் மிகவும் மோசமாக உள்ளதாக கூறி, அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுக்கும் தட்டுகளில் அரிசிகளை கொட்டி அதன் மூலம் எம்.எல்.ஏ-க்கு ஆரத்தி எடுக்க முற்பட்டனர். இதனால் பதற்றமான அதிமுகவினர், ஆரத்தி எடுப்பதை தடுக்க முயற்சித்தனர். இதனால் அதிமுகவினருக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக பெண்களை சமரசம் செய்து, பிரச்னை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணிக்கம் தெரிவித்தார். இருப்பினும் அவர்களை கட்டுப்படுத்த முடியாததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com