அக்டோபர் 31 ஆம் தேதியன்றுதான், திரு. சகாயம் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதியன்று வெளியான ஒரு இணையதள செய்தியிலேயே, இவ்வாறு செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, “கர்நாடகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிய திரு. அண்ணாமலை அவர்கள் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ப.ஜ.க -வில் சேர்ந்தது போல, விரைவில் திரு.சகாயம் அவர்களும் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, நாம் தமிழர் கட்சியில் இணைகிறார். அக்கட்சியில் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்” என்ற செய்தி வெளியாயுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக விஜய், சமுத்திரக்கனி, விஜய சேதுபதி போன்றவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர் என்ற செய்தியாக அது உள்ளது.
அந்த செய்தி வந்து ஒரு மாத காலத்திற்கு பிறகு, திரு. சகாயம் அவர்கள் தனது வேலையிலிருந்து விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருப்பது அந்த செய்திக்கு வலு சேர்ப்பதாக உள்ளதால், இது விரைவில் அரசியலில் ஒரு பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அரசு விதிப்படி, இரண்டு மாதகால அவகாசத்திற்கு பிறகு சகாயம் அவர்கள் அவருடைய பணியிலிருந்து விடுவிக்கப்படுவார். ஏற்கனவே, மக்கள் பாதை என்ற அமைப்பை தொடங்கி, அதன் மூலமாக மக்கள் சேவை செய்து வருகிறார் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள். லஞ்சம் வாங்குவதற்கு எதிரான பிரச்சாரத்தில் இளைஞர்கள் மத்தியில் திரு. சகாயம் அவர்கள் ஏற்கனவே பிரபலம்.
தற்போதய காலகட்டத்தில், இளைஞர்கள் மத்தியில் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக அறியப்படுபவர் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள். இந்நிலையில், அவர் தனது விருப்ப ஓய்வை கோரி இருப்பது அரசியல் வட்டாரங்களில் அவரின் அடுத்த நகர்வு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.