இன்றைய ராசிபலன் 23-04-2021

மேஷம்:

 குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

 

ரிஷபம்:  

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.  மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:2,5.

மிதுனம்:

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தில் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 2,6,9.

கடகம்:

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்சினைக்கு தீர்வு காண்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7.

சிம்மம்:

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்.  வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:1,69.

கன்னி:

 திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:2,6,9.

துலாம்:

பெற்றோரின் ஆசி கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை  உணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும் நாள்.

அதிர்ஷ்ட மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:5,9.

விருச்சிகம்:

  உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1,2,7.

தனுசு:

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல் நிலை சீர் ஆகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்:1, 3, 5.

மகரம்:

 சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும்.  உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:3, 6, 9.

கும்பம்:

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 5, 9.

மீனம்:

பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 2,5,7.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top