இன்றைய ராசிபலன் 22-04-2021

 

மேஷம்:

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

 

ரிஷபம்:  

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:2,5,7.

மிதுனம்:

 உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள்.  வியாபாரத்தில் சிலநுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6,9.

கடகம்:

 குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேண்டிய உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 2,6,9.

சிம்மம்:

 ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்  கொள்வது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:5,9.

கன்னி:

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உடல் நிலை பாதிக்கும். வியாபாரத்தில் அதிரடியான போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா; அதிர்ஷ்ட எண்கள்:1, 4, 6.

துலாம்:

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிக்கும். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள் 1,6,9.

விருச்சிகம்:

எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகன வசதிப் பெருகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7.

தனுசு:

உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்:2,6,9.

மகரம்:

 சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். வெற்றி பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:2,5.

கும்பம்:

கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:1,3, 9.

மீனம்:

எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர் நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிக்கும். பழைய வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1,3,5,9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top