இன்றைய ராசிபலன் 21-05-2021

மேஷம்:

 நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பரிசும், பாராட்டும் கிடைக்கும் நாள் .

ரிஷபம்:  

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள் .

அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:  2, 7.

மிதுனம்:

பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.  சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் உண்டாகும்.  நினைத்ததை முடிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:  2, 9.

கடகம்:

 குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். அலுவலகத்தில்  மரியாதைக் கூடும்.வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உற்சாகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.

சிம்மம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.  உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. தடைகளை தண்டி முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு, அடர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 4, 6.

கன்னி:

குடும்பத்தினரை அனுசரித்து போவது நல்லது. திடீர் பயண செலவுகளால் திணறுவீர்கள். சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

துலாம்:

சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:3, 7.

விருச்சிகம்:

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள் . உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:  2, 5, 7.

தனுசு:

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்:1, 3, 5.

மகரம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய சம்பவங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம் . வியாபாரத்தில் பற்று, வரவு சுமார் தான். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:1, 6, 9.

கும்பம்:

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் ஆதரிப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 6, 9.

மீனம்:

பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.  பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course