இன்றைய ராசிபலன் 19-05-2021

மேஷம்:

எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வாங்கி சமாளிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்:  

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:  2, 7.

மிதுனம்:

கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனை நீங்கி  மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.  வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நன்மை நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

கடகம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

சிம்மம்:

எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பல முறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் லாபம்  சுமாராக இருக்கும்.  உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.  விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 4, 6.

கன்னி:

உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

துலாம்:

 பிள்ளைகளால் மதிப்பு கூடும். உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்; அதிர்ஷ்ட எண்கள்:2, 6.

விருச்சிகம்:

 குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மை பெருகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, வெளிர் பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6.

தனுசு:

சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்: 3, 5, 9.

மகரம்:

 உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 5, 9.

கும்பம்:

உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 6, 9.

மீனம்:

பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு‌ அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 5.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course