இன்றைய ராசிபலன் 18-05-2021

மேஷம்:

 பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.  தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்:  

 குடும்பத்தினருடன்  கலந்தாலோசித்து முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் தரும். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.

மிதுனம்:

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவு கூடும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7.

கடகம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து  கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும்.  யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பிரச்சினை வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5..

சிம்மம்:

கணவன் – மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.  லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னை வரக்கூடும். உத்தியோகத்தில் புதிய திறமைகள் வெளிப்படும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

கன்னி:

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். ஆடை, ஆபரணம் வந்து சேரும். வியாபாரத்தில் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9.

துலாம்:

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:  2, 5, 7.

விருச்சிகம்:

 குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.

தனுசு:

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிறிய கவலைகள் வந்து நீங்கும் . உறவினர்கள், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கடன்களை வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்: 3, 6, 9.

மகரம்:

சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.   விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 5, 9.

கும்பம்:

உறவினர்கள் நண்பர்கள் உங்களை  கலந்து ஆலோசித்து சில  முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

மீனம்:

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top