இன்றைய ராசிபலன் 16-05-2021

மேஷம்:

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். துணிவுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்:  

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

மிதுனம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை நீங்களே செய்து முடிப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில்  மேலதிகாரிகள் குறை கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 7.

கடகம்:

 கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.  உறவினர்கள், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.  உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு, பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 7.

சிம்மம்:

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மதிப்பு கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்: 4, 5.

கன்னி:

சொந்தபந்தம் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 5.

துலாம்:

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு, அடர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 3.

விருச்சிகம்:

 சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.

தனுசு:

பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை வந்து சந்திப்பீர். வியாபாரத்தில் வேலையாட்கள்  ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்:  2, 5, 7.

மகரம்:

சமயோசிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

கும்பம்:

 அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதுஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

மீனம்:

 தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள்.  கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:  5, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com