இன்றைய ராசிபலன் 16-04-2021

மேஷம்:

குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் தற்போது உங்கள் கைக்கு வந்து சேரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

 

ரிஷபம்:  

நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 5, 9.

மிதுனம்:

எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும்.  அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:2, 5, 7.

கடகம்:

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும்.  இனிமையான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.

சிம்மம்:

உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.  வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:3, 6, 9.

கன்னி:

கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 5, 9.

துலாம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் மன இறுக்கம் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது.  வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

விருச்சிகம்:

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:3, 6, 9.

தனுசு:

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்:6, 9.

மகரம்:

புது முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:2, 7.

கும்பம்:

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கை, கால் வலி சோர்வு வந்து போகும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:3, 5.

மீனம்:

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course