இன்றைய ராசிபலன் 12-05-2021

மேஷம்:

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். அழகும், இளமையும் கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்:  

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்கள். உத்தியோகத்தில் முன்கோபப் பிரச்சினை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 9.

மிதுனம்:

 விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6.

கடகம்:

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:பச்சை, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

சிம்மம்:

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழிகளை  யோசிப்பீர்கள். உறவினர்களுடன்மனம் விட்டுப் பேசுகிறீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடமைகளை நிறைவேற்றும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 9.

கன்னி:

 கணவன்-மனைவிக்குள் அன்னோன்யம் அதிகரிக்கும் . புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்:  1, 3.

துலாம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 5, 7.

விருச்சிகம்:

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உறவினர்கள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 2,3, 7, 9.

தனுசு:

 சமயோசிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரிகளுக்கு விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, வெளிர் பிரவுண்; அதிர்ஷ்ட எண்: 1, 3, 9.

மகரம்:

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று, வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.

கும்பம்:

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:கருநீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9.

மீனம்:

குடும்பத்தினர்களுடன்  கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு  தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நட்பு வட்டாரம் விரிவடையும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். தொழிலில் பற்று, வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 5,6.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course