இன்றைய ராசிபலன் 11-05-2021

மேஷம்:

 ராசிக்குள் சந்திரன் இருப்பதால்  திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்:  

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்:  6, 9.

மிதுனம்:

 எதையும் சமாளிக்கும் மனதைரியம் கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:2, 7.

கடகம்:

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.

சிம்மம்:

 கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:  4, 6.

கன்னி:

சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறு சிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு, அடர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:  5, 6.

துலாம்:

 பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 7.

விருச்சிகம்:

நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.  வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:3, 6.

தனுசு:

குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, வெண் சிவப்பு; அதிர்ஷ்ட எண்: 1, 3, 9.

மகரம்:

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு பெருகும். உயர்வு பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், இள நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:3, 5, 9.

கும்பம்:

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை கொள்வார்கள் . அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், கரும்பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.

மீனம்:

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள்  வரும். மனசாட்சி சொல்லும் படி செயல்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1,5.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course