இன்றைய ராசிபலன் 10-04-2021

மேஷம்:

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை  நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.

 

ரிஷபம்:  

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளைச் செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். நன்மை நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5

மிதுனம்:

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அந்தஸ்து உயரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்:

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளைவிரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டம் ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

சிம்மம்:

சந்திராஷ்டமம் இருப்பதால்சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அனாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9

கன்னி:

பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3

துலாம்:

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6

விருச்சிகம்:

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாக்கும். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு:

எதிர்ப்புகள் அடங்கும் .தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். தடைகளைத் தாண்டி வெல்லும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7

மகரம்:

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வீகசொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்:

கணவன்-மனைவிக்குள்அன்யோன்யம் பிறக்கும். அழகும்இளமையும் கூடும்.  வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.  கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனசாட்சி படி செயல்பட வேண்டிய நாள்

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் நான்கு ஐந்துவேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top