இன்றைய ராசிபலன் 05-04-2021

மேஷம்:

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுபெருகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

உங்கள் செயல்களில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பிபெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6.

மிதுனம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6.

கடகம்:

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய் வழியில்மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

சிம்மம்:

சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவுஉயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அறிவுத்திறன் பெருகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 6, 9.

கன்னி:

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமைபடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.

துலாம்:

கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாக இருக்கும். திடீர்பயணம் உண்டு. வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

விருச்சிகம்:

சவால்களில் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

தனுசு:

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவு கிட்டும். புதிய பாதைதெரியும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்: 4, 6.

மகரம்:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்;அதிர்ஷ்ட எண்: 2, 9.

கும்பம்:

கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.  யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வரும். உத்தியோகத்தில் சக ஊழியரிடம் விவாதம் வேண்டாம்.எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்: 1, 5.

மீனம்:

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பழைய கடன்  பிரச்னைகள்  கட்டுப்பாட்டிற்குள் வரும். நம்பிக்கை வைத்திருந்தஇடத்தில்இருந்து நல்லசெய்தி வரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் வியாபாரத்தை  விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். லாபம் பெருகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்; அதிர்ஷ்ட எண்: 5, 6.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top