இன்றைய ராசிபலன் 04-05-2021

மேஷம்:

நீண்ட நாள் ஆசைகள்  நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். செயல்கள் வெற்றியாகும் நாள்.

ரிஷபம்:  

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 1,3,9.

மிதுனம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:3, 6, 9.

கடகம்:

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்:6, 9.

சிம்மம்:

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:2, 7.

கன்னி:

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீமஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

துலாம்:

தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில்  உங்கள் கை ஓங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 9.

விருச்சிகம்:

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெளிர் நீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 4, 6.

தனுசு:

 கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகும்,  இளமையும் கூடும். நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்: 3, 5.

மகரம்:

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, பிரவுன்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6.

கும்பம்:

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.  உறவினருடன் பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் வந்து நீங்கும். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, வெளிர் பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:1, 5, 6.

மீனம்:

குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உற்சாகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:3, 5, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top