இன்றைய ராசிபலன் 02-05-2021

மேஷம்:

கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.  தடைப்பட்ட வேலைகள் எல்லாம் இனிதே முடியும். பண வரவு திருப்தி தரும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை உயரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். நன்மை நடக்கும் நாள்.

ரிஷபம்:  

 சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள்.  நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 2,6,9.

மிதுனம்:

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.  கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 5,9.

கடகம்:

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:பச்சை, ஊதா; அதிர்ஷ்ட எண்கள்:1,4, 6.

சிம்மம்:

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:1,6,9.

கன்னி:

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:3,5,7.

துலாம்:

சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:2, 6, 9.

விருச்சிகம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.  அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.

தனுசு:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டிவரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். உணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்: 1,3,9.

மகரம்:

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 5, 9.

கும்பம்:

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை மேலதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 9.

மீனம்:

 கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நன்மை நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top