சுனாமியை வென்ற திருச்செந்தூர் முருகன் கோவில் ஒரு கட்டிடக் கலை அதிசயம் !

தமிழர்களின் விருப்பப்பட்ட புண்ணியத்தலம் என்றால் அது திருச்செந்தூர் தான். அறுபடை வீடுகளில் ஒன்றான இது அதன் கட்டிட அமைப்பு மூலம் உலகப் பிரசித்தி பெற்றது.

 

பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை.  கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப்படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல் தான் கட்டுவார்கள். ஆனால், திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் இருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

 

  

திருச்செந்தூர் கோவில் சிறப்புகள்:

 • இந்த திருக்கோவிலின் ராஜகோபுரம்,150 அடி உயரமுடையது.
 • இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
 • வழக்கமாக பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில் தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் உள்ளதால் மேற்கில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
 • முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தை விட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டு தான் உள்ளது.
 • கந்த சஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் அன்றைய தினம் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
 • கடற்கரையிலிருந்து 140 மீ தொலைவில் தான் அமைந்துள்ளது.
 • இந்த கோவிலின் கருவறை தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டது என்பது அதிசயம்.

 

 

திருச்செந்தூர் விவரங்கள்:

 • தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் இக்கோயிலைப் பற்றி காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால்,
 • இந்த கோவில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று கணிக்கலாம்.
 • சுப்பிரமணிய சுவாமி கோவில் பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். இது தேவார வைப்புத் தலமாக கருதப்படுகிறது.
 • இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது,

நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது !

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top