அரியர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

தேர்தலுக்கு முன்பு கடந்த ஆட்சியில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் மற்றும் அரியர் தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதால்  தேர்வுகள்  மீண்டும் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர் – டிசம்பர் 2020-ஆம் ஆண்டுக்கான பருவத தேர்வுகள் 2021 பிப்ரவரி மாதம் நடைபெற்றது.   இத்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக மாணவர்கள் அளித்த குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

 இதை அடுத்து பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில்  பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதற்கு  தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் விரும்பினால் அவர்களும்  இத்தேர்வினை எழுதலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனாக்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாள்கள் முறையைக் கடைப்பிடிக்கப்படும் எனவும் ஏப்ரல்  மே 2021 பருவநிலை தேர்வுகளும் மேற்கண்ட முறைகளில் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி, ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  தேர்வுகள் மே  25 முதல் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அதற்கான அறிவிப்புகளை  அந்தந்த பலக்லைக்கழகங்களே வெளியிடும் என தெரிவித்துள்ளார். 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com