சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும், இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமானது முதல் காண மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நெல்லை, விருதுநகர், மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்து கொட்டித்தீர்த்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 2017ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பெய்த மழைக்கு பிறகு, சென்னையில் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை தற்போதுதான் பதிவாகி உள்ளது. நகரப்பகுதியில் பெரும்பாலான சாலைகளில் தண்ணீல் குளம்போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Heavy Rain in Chennai

Heavy Rain Recorded in Chennai Region

மேலும், எப்பொழுதும் போல் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீர் வடிகால் பாதைகளை அடைத்திருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதை காணமுடிகிறது. இதற்கிடையில், மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கனமழை தொடர்பாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, வெகுவாக சென்னை மக்கள் வெளியே வரத்தொடங்கியிருக்கும் இந்நிலையில் காண மழை, மீண்டும் மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்துள்ளது.

scroll to top