கி.ரா அவர்களின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை – முதல்வர் மு.க.ஸ்டாலின் 

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயது முதிர்வால் புதுச்சேரியில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கரிசல் குயில் கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களில் ஒன்று இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ள வரை அவரது புகழ் வாழும்! என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவரின் குடும்பத்தினர் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் அவரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course