தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளே, வெளியே பயணிக்க இ-பதிவு கட்டாயம்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை  லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்கவும் மாவட்டங்களை விட்டு வெளியே செல்லவும் இன்று முதல் இ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
 
 சென்னையில்  நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி,மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிப்பதற்கு இன்று முதல் இ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ‘இ-பதிவு’ முறை (http://eregister.tnega.org) அமல்படுத்தப்பட்டது.
 
இந்த உத்தரவில், மருத்துவ சிகிச்சை, திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்கவும், மாவட்டங்களை விட்டு வெளியே செல்லவும் ‘இ-பதிவு’ முறை கட்டாயம் ஆகும். இது இன்று காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்’ என்று கூறப்பட்டிருந்தது.
 
எனவே இன்று முதல் தமிழகத்தில்  ‘இ-பதிவு’ முறை கட்டாயம் ஆகியுள்ளது. இதன் மூலம் கொரோனா 2-வது அலையின் பரவலை தடுப்பதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course