மூச்சுத்திணறல் காரணமாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால், தே.மு.தி.க தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அதிகாலை 3.00 மணிக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த்  உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து, விஜயகாந்த் வீட்டிலேயே இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொது கூட்டங்களில் கூட  பங்கேற்பது இல்லை.

கடந்த ஆண்டு கொரோனாவின் போது, அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலம் பெற்றிருந்தார். தொடர்ந்து நடந்த இந்தாண்டு சட்டசபை தேர்தலில், காரில் இருந்தபடி, கையசைத்து மட்டும் அவர் தே.மு.தி.க-வுக்கு பிரசாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top