18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடக்கம்!

கடந்த வாரம் கொரோனா கட்டுப்பாட்டிற்காக தமிழக அரசு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தில் இருந்து 7.96 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளையும் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து 1.66 லட்சம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளையும் தமிழக அரசு நேரடியாக வாங்கி சேமித்து வைத்துள்ளது. தற்போது கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன.

இதனை தொடர்ந்து நாளை முதல்  18 முதல் 44 வயது உடையவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த மாதம் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருந்ததால் அந்த திட்டம் தாமதமாக நாளை முதல் தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women