ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்த கொரோனா நோயாளி 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் கொரோனா நோயாளி ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தது உறவினர்கள், நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்கார்ட்டே நகர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவர் கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்தோணி தாசுக்கு கை,கால் வலி, காய்ச்சல் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உறவினர்கள் அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆக்சிஜன் வசதி இல்லாததால் மேல்மருத்துவத்துக்காக அவரை தேவி கானா விளக்கு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் ஆம்புலன்ஸிலும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதி இல்லாததால் சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொடைக்கானல் மலை பகுதியில் ஏற்கனவே ஆக்சிஜன் குறைவு அரசு மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் இருப்பது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே அரசு உடனடியாக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் போதிய அளவு இருப்பு இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com