காமெடி நடிகர் கிணற்றை காணோம் புகழ் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்.

காமெடி நடிகர், கிணற்றை காணோம் புகழ் கொண்ட நெல்லை சிவா நேற்று மாலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69 ஆகிறது. நெல்லை சிவா அவர்கள் 1952 ஆம் ஆண்டு ஜனவரி 16-ல் நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள வேப்பிலங்குளத்தில் பிறந்தார்.

இவர் பாண்டியராஜன் நடித்த  ஆண் பாவம் படத்தின் மூலம் அறிமுகமானார். 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து, 500 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். 

இவர் நடித்திருக்கும் படங்கள் சில இன்னும் வெளிவராமல் உள்ளது. இவரது இறுதி சடங்கு சொந்த ஊரான நெல்லையில் உள்ள பணகுடியில் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. இவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top