விஸ்வரூபம் எடுத்த கமல்;தோல்வியிலும் கமல்ஹாசன் சாதனையே!

சென்னையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இரண்டாம் இடத்தை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அம்மன் அர்ஜுனன் 59,788 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் 42, 369 வாக்குகளை பெற்று இரண்டாவது இடம் பெற்றார். இதைத் தொடர்ந்து பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் 33,113 பெற்று மூன்றாவது இடம் பெற்றார். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. ஏனென்றால் அங்கு போட்டியிட்ட கமல்ஹாசன்தான். அதேபோல் வானதியும், மயூரா ஜெயக்குமாரும் அவரவர் கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஆவர். 

கமல்ஹாசன் கோவை தொகுதியை தேர்வு செய்ய இரு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று தொழில் துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தொழிற்சாலைகள் நிறைய கோவையிலிருந்து எம்எல்ஏவாக தேர்வாவது, மற்றொன்று கமல் பாஜகவை எதிர்த்து  போட்டியிட விரும்பியது.

கடந்த தேர்தலில் மயூரா ஜெயக்குமார் இரண்டாவது இடத்தையும் வானதி ஸ்ரீனிவாசன் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள் என தெரிந்தும் கமல்ஹாசன் அங்கு போட்டியிட்டார். இதற்கு பாராட்டித்தான் ஆக வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது கமல் வானதிக்கும், மயூராவிற்கும் டஃப் கொடுத்தார். கடைசி வரை தொடர்ந்து முன்னிலை வகித்த கமல்ஹாசன், வானதியுடன் மட்டுமே கடுமையாக போராடினார். இறுதியில் ஆயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வானதி வென்றார். கமல் தோற்றாலும் பாராட்ட கூறிய ஒருவராக காட்சியளிக்கிறார்.   

அதாவது கடந்த தேர்தலில் மயூரா ஜெயக்குமார் இரண்டாவது இடம் பெற்றார். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு கமல்ஹாசன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இது நிச்சயம் சாதாரண விஷயம் அல்ல.கமல்ஹாசன் சாதனையே.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women