மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சி.கே.குமரவேல் திடீரென விலகல்! 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலகி கொண்டிருக்கின்றனர். மகேந்திரன், முருகானந்தம், சந்தோஷ் பாபு, பத்மபிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் விளக்கியுள்ளனர்.

நிலையில் கட்சியின் பொதுச் செயலாளரான சி.கே.குமரவேல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனிமனித பிம்பத்தை சார்ந்த அரசியலை விடவும் மதச்சார்பற்ற ஜனநாயக பாதையில் பயணிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ள அவர் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும் அவரது வழிநடத்தலுமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

வரலாறு படைப்பார்வளாக இருக்க வேண்டிய நாங்கள் வரலாறு படிப்பவர்கள் ஆக மாறிவிட்டோமே என்கிற கோபமும், ஆதங்கமும் நிறைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top