ஐபிஎல் 2021 : கொல்கத்தா – சென்னை அணி மோதல் – முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 220 ரன்களை எடுத்து அபார ஆட்டம்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 15 வது போட்டியில் கொல்கத்தா அணியும், சென்னை அணியும் விளையாட உள்ளன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு கம்லேஷ் நாகர்கோட்டி சேர்க்கப்பட்டுள்ளார். ஷகிப் அல் ஹசனுக்குப் பதில் சுனில் நரைன் களமிறங்குகிறார். சென்னை அணியில் பிராவோவுக்குப் பதில் நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் முதலில் பேட் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் டுப்ளசிஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். மைதானத்தில் சிக்ஸர் மலை பொழிந்தது. ருத்ராஜ் கெயிக்வாட் 42 பந்துகளில் 64 எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மொயின் அலி 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஒரு பக்கத்தில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டுப்ளசிஸ் 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணியின் கேப்டன் தோனி 17 ரன்கள் எடுத்தார். அனைவரின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணியின் ஸ்கோர் மலமலவென உயரத் தொடங்கியது. இறுதியாக சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. சீசனில் இதுவரை ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள கொல்கத்தா அணி 221 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women