செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவலம் – நோயாளிகள் வேதனை!

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் தொற்று  அதிகரித்து விடுமோ என அங்கு மருத்துவம் பெற்று வரும் நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள் தோறும் சுமார் 5 ஆயிரம் பேர் புற நோயாளிகளாகவும் 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக மருத்துவம் பெறுகின்றனர். தற்போது கொரோனா பரவல் தாக்கத்தால் நாளொன்றுக்கு 2,500 பேர் கொரோனா நோயாளிகளாக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பிரிவில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு மலை போல் காட்சியளிக்கிறது. அவை உடனுக்குடன் அகற்றப்படாததால் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

அதைபோல் நோயாளிகளுக்கு உதவி உறவினர்களுக்கும் அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என அவர்கள் அச்சம் தெரிவித்தனர். இதனால் அங்கிருக்கும் மருத்துவ கழிவுகளை உடனே அகற்ற மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top