தமிழகத்தில் பா.ஜ.க -வின் வேல் யாத்திரை. பங்கேற்க போவது யார்?

தமிழகத்தில், நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த போவதாக தமிழக பா.ஜ.க அறிவித்துள்ளது. இதுவரை, வேல் யாத்திரைக்கான அனுமதி சரிவர தமிழக காவல்துறையிடமிருந்து கிடைக்கவில்லை. இருப்பினும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த வேல் யாத்திரையை அனுமதிக்க கூடாது என்று, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம் போன்றவை தடைகோரி வருகின்றனர். இருப்பினும், இந்த வேல் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

BJP Vel Yathirai

பா.ஜ.க -வின் கட்சியில் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பது “ராமர்”. ராமர் கோவில், ராம ராஜ்ஜியம் என பல்வேறு தளங்களில் தங்களின் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர். இருப்பினும், தென்னகத்தில், குறிப்பாக தமிழ்நாட்டில் ராமர் கோவில்களோ அல்லது ராமர் வழிபாடோ அதிகம் இல்லை. எனவே இதை கருத்தில் கொண்டு, தமிழ் கடவுளாகிய முருகனின் வேலை தற்போது கையில் எடுத்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி, “வீரத் தமிழர் முன்னணி” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதை அவர்களுடைய பண்பாட்டு மீட்சி பாசறையாக செயல்பட்டு வருகிறது. இது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முப்பாட்டன் முருகன், வெற்றிவேல் வீர வேல் போன்ற முழக்கங்கள் பரவலாக நாம் தமிழர் கட்சிக்கான முழக்கங்களாக பார்க்கப்பட்டன. இந்நிலையில், தமிழ் நாட்டில் தமிழ் கடவுளான முருகனை கையிலெடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு பா.ஜ.க தள்ளப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

மேலும், பா.ஜ.க தலைவராக எல்.முருகன் பதவியேற்ற பிறகு வேல் பூஜை தொடங்கி தற்போது வேல் யாத்திரை வரை அவர்களின் பயணம் வேறு திசையில் மாறியுள்ளது. மக்களிடம் பா.ஜ.க -வை கொண்டுசேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்பது புரிகிறது.

யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

பா.ஜ.க சார்பில் நடத்தப்படும் இந்த வேல் யாத்திரையை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அவர்கள். இதற்கான முன்னேற்பாடுகள் கடந்த ஒரு மாதமாகவே நடந்து வருகிறது.

இதில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், பா.ஜ.க -வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிகிறது. மேலும் பா.ஜ.க -வை சேர்ந்த பல மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் நடக்கும் இந்த வேல் யாத்திரை தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு மாநில அளவில் அவர்களுக்கு கை கொடுக்கும் என்று தேர்தலில் தான் தெரியவரும்.

வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு

இந்த யாத்திரையை டிசம்பர் 6-ஆம் தேதி வரை நடத்த பா.ஜ.க நடத்த திட்டமிட்டிருப்பதால், இது பொது அமைதியை குலைக்க வழி வகுக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற காட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். டிசம்பர் 6 -ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், அம்பேத்கர் பிறந்த தினம் என்பதாலும் மூன்றாவதாக இது இந்த வேல் யாத்திரையின் நிறைவு தினமாக இது அமைந்தால் இது சமூக சிக்கலுக்கு வழி வகுத்துவிடக்கூடாது என அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

scroll to top