ஓட ஓட விரட்டி வழக்கறிஞர் படுகொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

 

.

 

வழக்கறிஞர் அழகரசன் என்பவர் காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் நேற்று முன்தினம்  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அரசு மருத்துவமனை முன்பு  இந்த கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பார் அசோசியேஷன் உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை வக்கீல் எழிலரசன், தனது நண்பர் சங்கர் என்பவருடன் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் வக்கீல் அழகரசனை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற நண்பரும் படுகாயம் அடைந்து உள்ளார்.

 

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த உடலை வாங்க மறுத்து, வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் 1 மணிவரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

 


உடலை வாங்க மறுத்து வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  எஸ்பி சண்முகப்பிரியா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டனர். பின்னர், எஸ்பி சண்முகப்பிரியா, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி,சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course