தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி! முதல்வராகிறார் மு.க ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன்  வெற்றி பெற்று உள்ளதால் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி  மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அரியணையில் அமரப்போகிறது திமுக கூட்டணி. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 622 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றிப்பெற்றார்.

 

 தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,மேற்கு வங்கம்,அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான  சட்டப்பேரவைத் தேர்தலில்  பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் காலை 9 மணி முதலே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று அதிமுக பின் தங்கியது. இந்நிலையில் தனி பெரும்பான்மைக்கு தேவையான 118  இடங்களை விட திமுக அதிக இடங்களில் முன்னிலை பெற்று உள்ளதால் மு க ஸ்டாலின் அமைச்சராவது உறுதி ஆகிவிட்டது .

இன்று காலை 9 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 143 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.மேலும் 16  இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 71 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.மேலும் 4  இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

திமுக கூட்டணி – 159 இடங்களில் வெற்றி 

திமுக – 125 

காங்கிரஸ் – 18 

விசிக – 4

 மதிமுக – 4 

சிபிஎம் – 2 

சிபிஐ – 2

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகள் – 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி – 72 இடங்களில் வெற்றி 

அதிமுக – 62 

பாமக – 5

 பாஜக – 4 

இதர கட்சிகள் – 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

வெற்றி நிலவரம் 231 இடங்களில் முடிவு வெளியாகி உள்ளது. மநீம, நாம் தமிழர், அமமுக – எங்கும் முன்னிலை, வெற்றி பெறவில்லை

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course