ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணை திருமணம் செய்து வைக்கும் போது மணமகனின் வீட்டார் அதிகபட்ச வரதட்சணை கேட்டுள்ளனர்.
இந்நிலையில், முடிந்த அளவுக்கு மணமகன் வீட்டில் வரதட்சணை கொடுத்து திருமணத்தையும் நடத்தியுள்ளனர். ஆனால், கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணின் மாமனார், மாமியார் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளனர். இதன் உச்ச கட்டமாக கணவனின் வீட்டார் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து அடித்து தாக்கியுள்ளனர். இதனை வீடியோ எடுத்த பலர் வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது வைரலாகி கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு நிகராய் பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட மாமனார் சந்திரா நாயக் மற்றும் அவரது இரு மகன்கள் முன்னா, நிரஞ்சன் மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News