தமிழகத்தில் இன்று காலை 16,6812 பேருக்கு மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இச்சோதனையில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6,247 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 311.
அதில் அரசு மருத்துவமனைகளில் 163 பேர், தனியார் மருத்துவமனைகளில் 148 பேர், என 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 17,670 ஆக அதிகரித்துள்ளது. இதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இணை நோய் எதுவும் இல்லாத 84 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,19,342 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 21,317 பேர், இதுவரை 13,61,204 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News