ஆன்லைனில் வெற்றிகரமாக பிசினஸ் செய்வது எப்படி?

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ஆன்லைன் வியாபாரம் என்பது தற்பொழுது பெருகி விட்டது. பலர் இன்று ஆன்லைன் மூலம் வெற்றிகரமாக தங்களது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். நிறைய பணமும் சம்பாதித்து வருகின்றனர். இந்த தொழிலை நீங்கள் வெற்றிகரமாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இத்தொழிலை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே செய்யலாம் – உங்களுக்கு செலவுகளும் குறையும். ஆன்லைனில் வியாபாரம் செய்வதற்கு ஒரு நல்ல கூரியர் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக் கொள்வது அவசியம். நீங்கள் குறைந்த முதலீட்டில் உங்கள் வியாபாரத்தை செய்ய விரும்பினால், ஆரம்ப காலங்களில் அமேஸான், ஃபிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் வாயிலாக உங்களது வியாபாரத்தை துவங்கலாம்.

உங்களது வியாபாரம் பெருகும் போது, நீங்களாகவே உங்களின் சொந்த இணையதளம் மற்றும் செயலி மூலம் விற்பனை செய்யலாம். இந்தியா முழுவதும் உங்களின் விற்பனை பெருகும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆன்லைன் விற்பனை மேலும் பயனுள்ளதாக அமையும். இதற்குத் தேவையான மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன – ஆகவே ஆரம்பிப்பது எளிது!

நாம் மேலே கண்டது போல பல வழிகளில் இன்று வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம். உங்கள் விருப்பம், திறமை போன்றவற்றை பொருத்து நீங்கள் ஆன்லைன் சம்பாத்தியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! இனி, இதற்குத்தான் பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை மறக்காதீர்கள்!

ஆன்லைன் மார்க்கெட்டிங்: இதை ‘ரெஃபரல் மார்க்கெட்டிங்’ என்றும் அழைக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு தொழில் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதற்கென்று ஒரு வெப்ஸைட் வைத்திருப்பீர்கள். அந்த வெப்ஸைட்டில் இன்னொரு நிறுவனத்தை விளம்பரம் செய்ய நீங்கள் அனுமதிக்கலாம். அந்த விளம்பரத்தைக் கிளிக் செய்து, ஒரு பொருளை ஒருவர் வாங்கும் பொழுது, உங்களுக்கான கமிஷன் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்! அமேஸான், ஃபிளிப்கார்ட் போன்ற பல ஆன்லைன் நிறுவனங்களுக்கு நீங்கள் மார்க்கெட்டிங் செய்து கொடுக்கலாம். பலர் தங்களுக்கென பிரத்யேகமாக பிளாக் (blog) ஒன்றை வைத்திருப்பார்கள். அது மூலமும் இதுபோன்ற ‘ரெஃபரல் மார்க்கெட்டிங்’ செய்து கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women