உணர்வுகளுக்குள் ஒளிந்திருக்கும் பாடங்கள்!!!

பல்வேறு உணர்ச்சிகளையும் ருசித்துணரச்செய்யும் இந்த வாழ்வு அறுசுவையும் நிறைந்தது. வாழ்ந்து கழித்த நாட்களை திருப்பி பார்க்கும் போது தான் உரைக்கும், நாம் சாதித்ததும், சாதிக்க நினைத்ததும். இன்றும் நம் முன்னால் நிழலாடும் பிரச்சினைகள் உணர்த்தும் யதார்த்தங்களை. வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து தீர்ப்போம்.

கோபம்

Showing Anger

நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்வுகளும் நம்மை நாமே உணர்ந்து தெளியவே, உதாரணமாக ஒரு குறிப்பிட்ட சூழலில் கோபப்படுகிறீர்கள் அந்த கோபம் மூலம் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் புரிய வைப்பது என்ன? அந்த குறிப்பிட்ட சூழலில் பிடிக்காத உணவு, பிடிக்காத நபர் அல்லது அவரது எரிச்சலூட்டும் பேச்சு, நேரமோ பணமோ பற்றாக்குறை காரணமாக, இது போன்ற எதிர்மறை எண்ணங்கள் உங்களை கோபமடையச்செய்கிறது. நிதானமாக சுய அலசல் செய்து பார்த்தால், உங்கள் கோபத்தால் நீங்கள் இழந்த இழப்பு பெருநட்டமாக இருக்கலாம். வெறும் பணம் மட்டுமே இழப்பில்லை. ஈடு இணையில்லாத உறவுகளாக கூட இருக்கலாம்.

உங்கள் விருப்பு வெறுப்புகளை கோபத்தின் மூலம் உங்கள் உலகத்தில் உள்ளவர்களுக்கு புரிய வைக்கலாம். ஏனெனில் புழுக்கூட தனக்கான எதிர்ப்பைக் காட்டிய பின்பு தான் மரிக்கிறது. ஆகவே கோபமும் தேவை.

அச்சம்

ஒழுக்கம், கட்டுப்பாடு, விதிமுறைகள் என தனிமனிதனையோ ஒரு சமூகத்தையோ கட்டுப்படுத்தும் அனைத்தும் அச்சத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. அபராதம், தண்டனை, பெரியவர்களின் கடுஞ்சொல், மனச்சாட்சி, கடவுள் மீதான பயம் இப்படி ஏதோவொன்று தான் வாழ்வின் ஓழுங்குமுறைகளை கடைப்பிடிக்க உதவுகிறது.

வியாபாரத்தில் தோற்றுவிடுவோமோ அல்லது பரிட்சையில் தோல்வி, மனம் எதிர்கொள்ள இயலாத அச்சங்கள் உறுதியாக நம்மை நமது கனவுகளை பாழ்படுத்துகிறது என்பது கசப்பான உண்மை. எதற்கு, எப்போது, எங்கு அஞ்சுவது என்று லகானை உங்கள் கையில் வைத்து கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி

Happy

சலித்து கொள்ளும் இந்த வாழ்க்கையை சில நொடிகளில் உற்சாகமடைய வைப்பது சின்ன சின்ன சந்தோசங்களே! சந்தோசத்தின்அளவுகள், வரையறைகள் ஒவ்வொரு தனிமனிதனை சார்ந்தது. பரபரப்பான இந்த வாழ்க்கைக்கு ஊக்கமளிப்பது சந்தோசங்கள் தான். உங்கள் மனம் கொண்டாடும் சந்தோஷம் நேர்மையானது எனில் சந்தோஷ நொடிகளை அதிகப்படுத்துங்கள். உடலும் மனமும் புத்துணர்வு பெறும்.

எவருக்கும் கேடு நினைக்காத மென்மையான மனம் ஒன்றை விரும்பி வளர்த்தெடுங்கள். உங்களுக்கு பாதிப்பையோ, தீமையோ செய்தவர் மீதும் பழிக்குப் பழி என்ற வஞ்சம் நெஞ்சத்தில் வளர்த்திடாமல்
உங்களைத் தற்காத்து நகர்ந்து செல்லப் பழகுங்கள்! அரிதான பிறவியை அழகுபட வாழ்ந்து தீர்ப்போம்!


Feeling is an emotional state or reaction based on situations or mental state. There are different states of feeling and each have lessons behind. Anger can be a good thing. It can give you a way to express negative feelings. But excessive anger can cause problems. It may cause headaches, fatigue, pressure in head, increases blood pressure. Fear causes a change in metabolic and organ functions and a change in behavior, such as fleeing, hiding, or freezing from perceived traumatic events. Happiness is a emotional state of well-being having pleasant emotions such as joy, gratitude, etc.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course